தொடர்ந்து முதலிடத்தில் ராயபுரம்: பின்னாலே விரட்டி வரும் கோடம்பாக்கம்: சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாள்தோறும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் நேற்று சென்னையில் மட்டுமே 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் கொரோனாவுக்கு ராயபுரம் மற்றும் கோடம்பாக்கம் ஆகிய இரண்டு பகுதிகள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இரண்டு பகுதிகளிலும் 600-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சற்று முன்னர் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ராயபுரத்தில் 676 பேர்களும் கோடம்பாக்கத்தில் 630 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதனை அடுத்து திருவிக நகரில் 556 பேர்களும் தேனாம்பேட்டையில் 412 பேர்களும் அண்ணாநகரில் 310 பேர்களும் வளசரவாக்கத்தில் 319 பேர்களும் அம்பத்தூரில் 275 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூரில் 28 பேர்களும் பெருங்குடியில் 36 பேர்களும் மணலியில் 42 பேர்களும் ஆலந்தூரில் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் நிலையில் இன்று முதல் கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் திறந்து விடப்பட்டுள்ளதால் சென்னையில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இருப்பினும் தனிமனித இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் இல்லையேல் சென்னையில் இன்னும் அதிகமாக கொரோனா தாக்குதல் இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது

More News

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது?

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும்

கொரோனா பரவல் நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா??? புதிய ஆய்வு என்ன சொல்கிறது???

கடந்த 2 மாதங்களாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக உலகமே முடங்கி இருந்தது.

தனி வார்டில் வசதியில்லை: புகார் கூறிய 24 மணி நேரத்தில் 3 ஸ்டார் வசதி செய்து கொடுத்த முதல்வர்

கொரோனா வார்டில் வசதியில்லை என புகார் அளித்த 24 மணி நேரத்தில் 3 ஸ்டார் ஹோட்டலில் உள்ள வசதி செய்து கொடுத்த முதல்வர் குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

ரஜினியால் இவரை எச்சரிக்கை செய்ய முடியுமா? ரவிகுமார் எம்பி கேள்வி

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வந்தன

மகனுக்கு முடிவெட்டி சிகை அலங்காரம் செய்த பிரபல தமிழ் ஹீரோ!

கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.