தொடர்ந்து முதலிடத்தில் ராயபுரம்: பின்னாலே விரட்டி வரும் கோடம்பாக்கம்: சென்னை கொரோனா நிலவரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாள்தோறும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் நேற்று சென்னையில் மட்டுமே 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் கொரோனாவுக்கு ராயபுரம் மற்றும் கோடம்பாக்கம் ஆகிய இரண்டு பகுதிகள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இரண்டு பகுதிகளிலும் 600-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சற்று முன்னர் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ராயபுரத்தில் 676 பேர்களும் கோடம்பாக்கத்தில் 630 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இதனை அடுத்து திருவிக நகரில் 556 பேர்களும் தேனாம்பேட்டையில் 412 பேர்களும் அண்ணாநகரில் 310 பேர்களும் வளசரவாக்கத்தில் 319 பேர்களும் அம்பத்தூரில் 275 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூரில் 28 பேர்களும் பெருங்குடியில் 36 பேர்களும் மணலியில் 42 பேர்களும் ஆலந்தூரில் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் நிலையில் இன்று முதல் கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் திறந்து விடப்பட்டுள்ளதால் சென்னையில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இருப்பினும் தனிமனித இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் இல்லையேல் சென்னையில் இன்னும் அதிகமாக கொரோனா தாக்குதல் இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout