ஆபாச பேச்சு..போதை ஆட்டம்....! சில்மிஷ சிக்கா சூர்யா, சேனலுக்கு ஆப்பு வைத்த கோர்ட்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூகவலைத்தள பிரபலமான ரவுடி பேபி சூர்யாவின் யுடியூப் பக்கத்தை முடக்கவேண்டும் என, நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆபாச அர்ச்சனை முதல் குடிபோதை வரை:
திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையம் என்ற பகுதியில் சபரிநகரில் வசித்து வருபவர் தான் ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமி. இவர் சிக்கா என்ற நபருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வருகிறார். டிக்டாக்-கில் ஆபாச வீடியோக்கள் மற்றும் கெட்டவார்த்தை பேசி வீடியோ வெளியிட்டு மிகவும் பிரபலமானார். தற்போது யுடியூபில் தவறான வார்த்தைகள் பேசியும், அரைகுறை ஆடைகள் அணிந்தும், மற்றவர்களை அசிங்கமா பேசியும், தான் மது அருந்துவது கெத்து என நினைத்தும் வீடியோ பதிவிட்டு வருகிறார். எனக்கு ரசிகர்கள் உள்ளனர் என்று தன்னை தானே பெருமையடித்துக்கொள்ளும் சூர்யா, இவருக்கு அறிவுரை கூறுபவர்களையும் சரமாரியாக திட்டிவருவார்.யுடியுபில் பெரும்பாலும் நெட்டிசன்கள் இவரை ட்ரோல் செய்து வீடியோக்களை பதிவிட்டு வருவது வழக்கமான ஒன்றாகும்.
இந்நிலையில் பல ஊர்களைச் சார்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மொபைல் போனை ஆன்லைன் வகுப்பிற்காக பயன்படுத்துவதாகவும், யுடியூபில் அசிங்கமாக பேசியும், மது அருந்திக்கொண்டு ஆபாச நடவடிக்கைகளை ஈடுபடுவதாகவும் சூர்யா மீது புகார்கள் கொடுத்தும், அறிவுரை கூறியும் வந்தனர். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத சூர்யா, நான் அப்படித்தான் செய்வேன் என கெத்தாக பேசி சிக்காவுடன் சில சில்மிஷ செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்:
இதையடுத்து கீழ்க்கரையைச் எம்.எம்.கே.முகைதீன் என்பவர், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
"சமீபகாலமாக வலைதளங்களில் ஆபாச வீடியோ பதிவுகள் அதிக அளவில் வலம் வருகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் திறக்காததால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணையத்தில் அதிக நேரம் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திய பேஸ்புக் , ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அப்பாவி மாணவர்களை வழிகெடுத்து அவர்களை ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் 1,ஜிபி முத்து, 2. திருச்சி சாதனா, 3. பேபி சூர்யா, 4.சிக்சர் என்ற சிக்கந்தர் மேலும் பலர் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
ஆபாச பாவணைகள் இந்த வீடியோக்களை லட்சகணக்கானோர் காண்கின்றனர். இவர்களின் உடல் பாவணைகளும் பேச்சுக்களும் தமிழ்நாட்டில் கலாச்சாரம் மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்தும். குறிப்பாக இதை காணும் சிறுவர், சிறுமிகளின் மனதை பாதிப்படைய செய்யும் வகைல் ஆபாச பதிவுகள் உள்ளது. இளைய சமுதாயத்தை பாதிக்கும் இத்தகைய இணையதளங்களை கண்டறிந்து அவற்றை தடை செய்ய வேண்டும், மாணவர்கள் மத்தியில் விஷத்தை பரப்பும் கொடிய உள்ளம் கொண்ட ஆபாச பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற பதிவுகள் மேலும் தொடராமல் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.
சேனல் முடக்கம்:
ரவுடி பேபி சூர்யா குறித்த செய்திகள் பத்திரிக்கைகள் மற்றும் வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இவ்வழக்கு இன்று திருப்பூர் முதன்மை அமர்வு நீதிபதி முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டது. இறுதியில் நீதிபதி அவர்கள் "சூர்யா என்கிற சுப்புலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவரது யுடியூப் சேனலை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கடிதம் ஒன்றை காவல் துறையினருக்கு அனுப்பிவைத்தார்.
நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் விரைவில் பேபி சூர்யாவின் யுடியூப் சேனல் முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் யுடியூபில் ஆபாசமாக பேசுபவர்களாக சுகந்தி சகோதரிகள், சாதனா, திவ்யா உள்ளிட்டோர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகின்றது.
ரவுடி பேபியின் இந்த நிலையை கண்ட ட்ரோலர்ஸ், தங்களுடைய கண்டென்டுக்கு தீனி கிடைத்து போல, இவரை வைத்து சரமாரியாக கலாய்த்தும், கமெண்டுகளை பதிவிட்டும் வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments