ரவுடி பேபி சூர்யாவை கவனிங்க....!போலீசிடம் கோரிக்கை வைத்த நெட்டிசன்கள்....!
- IndiaGlitz, [Saturday,June 19 2021]
யுடியூபில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்த பப்ஜி மதனை, நேற்று காவல் துறையினர் கைது செய்தனர்.
தருமபுரியில் தலைமறைவாகி இருந்த பப்ஜி மதனை, சைபர் கிரைம் காவல் துறையினர் நேற்று தீவிர தேடுதல் வேட்கையின் மூலம் கண்டுபிடித்தனர்.159 புகார்கள் இருந்த ஆபாச மதனை கைது செய்த காவல் துறையினர், சொகுசு கார்களை பறிமுதல் செய்து, சொந்த ஊரான சேலத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மதன் ஓபி-யின் செல்போன், லேப்டாப் மற்றும் வங்கி ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றி, நேற்று மாலையளவில் சென்னை அழைத்து வந்துள்ளனர்.இங்கு வந்ததும், அவனை செய்திக்காக ஒளிப்பதிவாளர்கள் படப்பிடித்ததால், கோபமடைந்த மதன், அவர்களை பார்த்து 'நான் என்ன பிஎம் -ஆ ஏன் என்னை வீடியோ எடுக்குறீங்க? என்று கேட்டுள்ளான். இதனால் கடுப்பான காவல் ஆய்வாளர் ''நீ அக்யூஸ்ட் வாயா'' என்று கூறி கூட்டிச்சென்றார். யுடியூபில் தன்னை புகழ்ந்து காணொளி வெளியிடுபவர்களுக்கு 5,000 ரூபாயும், ஆபாச உரையாடல்களுக்கு உதவியாக இருந்த பெண்ணுக்கு ரூ.5 லட்சமும், மதன் தந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மதனின் மனைவி கிருத்திகாவின், வங்கி கணக்கையும் காவல் துறையினர் முடக்கம் செய்துள்ளனர். சேனல்களுக்காக இவரின் வங்கிக்கணக்கு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், உதவி செய்வதாக கூறி கூகுள் பே, போன் பே மூலம் லட்சக்கணக்கில் ரசிகர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்றும், யுடியூப் வீடியோக்கள் மூலம் 4 கோடி வரை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் வினோத் குமார் தலைமயில், தனிப்படை அமைத்து காவல் துறையினர் மதனை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மதனிடம் வேறு யாராவது பணம் கொடுத்து ஏமாந்திருந்தால், புகார் தெரிவிக்கலாம் என காவல் துறையினர் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் மதனைப்போலவே சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிடுபவர்கள் குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்தவகையில் திருப்பூரை சேர்ந்த ரவுடி பேபி சூர்யா, சிக்கா என்ற லிவிங் டூ கெதரில் வாழும் யுடியூப் தம்பதி வீடியோக்கள் மூலமாக பலரை கெட்ட வார்த்தையில் திட்டுவதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் பலரும் புகார் கூறியுள்ளனர். தனிப்பட்ட நபர்களை குறித்து அசிங்கமாகவும், அரைகுறை ஆடை அணிந்து வீடியோ பதிவிட்டு வரும் ரவுடி பேபி மீதும் விரைவில் வழக்கு தொடரும் என்பது நெட்டிசன்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.