'ரெளடி பேபி' பாடலுடன் கனெக்சன் ஆகும் 'சூர்யா 38' பட பாடல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்து வரும் 38வது திரைப்படமான 'சூரைப்போற்று' திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் ஜிவி பிரகாஷ், பாடல்களை கம்போஸ் செய்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்தின் பாடல்களில் ஒன்றை பாடகி Dhee பாடிவுள்ளதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதே பாடகி தான் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாகி யூடியூபில் சாதனை செய்த 'ரெளடி பேபி' பாடலை தனுஷுடன் இணைந்து பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கிய முதல் படமான 'இறுதிச்சுற்று' படத்தில் இடம்பெற்ற 'ஏ சண்டக்காரா.... என்ற பாடலையும் இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடகி Dhee பாடிய பாடலை சற்றுமுன் ஒலிப்பதிவு செய்துள்ளதாகவும், மிக சிறப்பாக இந்த பாடல் வந்துள்ளதாகவும், இந்த பாடலும் சூப்பர் ஹிட்டாகும் என தான் எதிர்பார்ப்பதாகவும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
The stunning voice behind #rowdybaby #sandakkara the lovely #Dhee sings for #Suriya38 #GV70 ... recorded overseas with this superb talent ... a quirky fun trk onway ... pic.twitter.com/UBH8UqoHP9
— G.V.Prakash Kumar (@gvprakash) April 23, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com