சிம்புவின் மூன்றில் ஒன்று ரிலீஸ். ரசிகர்கள் உற்சாகம்

  • IndiaGlitz, [Sunday,June 26 2016]

சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்னும் ஒருசில நாட்களில் அவர் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கவுள்ள 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்த படத்தின் ஒரு கேரக்டருக்காக அடர்ந்த தாடி மீசையுடன் கூடிய கேரக்டரிலும், இன்னொரு கேரக்டருக்காக 95 கிலோ எடையுடன் கூடிய கெட்டப்பிலும் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் தாடி மீசையுடன் கூடிய சிம்பு கெட்டப்பின் ஸ்டில் ஒன்று தற்போது இணையதளங்களில் வெளிவந்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைக்கும் யுவன்ஷங்கர் ராஜா மொத்தம் ஒன்பது பாடல்களை கம்போஸ் செய்யவுள்ளதாகவும் அவற்றில் ஒரு பாடலின் பணி முடிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் சிம்புவுடன் நடிக்கவுள்ள நாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.