பெரும் இழப்பு… சோகத்தில் மூழ்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ… ஆறுதல் கூறும் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஏற்பட்ட பெரும் சோகம் காரணமாக அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஏற்கனவே ஜுனியர் ரொனால்டோ, மேடியா என்று இரு மகன்களும் ஈவா, அலனா என்று 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்டியானோவின் காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் மீண்டும் கர்ப்பம் அடைந்திருப்பதாகவும் அதனால் தாங்கள் இரட்டைக் குழந்தைகளை வரவேற்க இருப்பதாகவும் கடந்த அக்டோபர் மாதம் கூட்டாக இருவரும் சமூகவலைத்தளங்களில் தகவல் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து கிறிஸ்டியானோ மற்றும் ரோட்ரிக்ஸின் ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளைக் கூறிவந்தனர்.
இந்நிலையில் தற்போது தங்களுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஆண் குழந்தை இறந்துவிட்டதாகவும் பெண் குழந்தை நலமுடன் இருப்பதாகவும் ரொனால்டோ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இரட்டைக் குழந்தை பிறந்தது, அதில் ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டது, பெண் குழந்தை நலமுடன் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
மேலும் எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலியைத் தற்போது உணர்ந்துள்ளேன் என்றும் பெண் குழந்தை பிறந்தது மட்டுமே இந்தத் தருணத்தில் ஓரளவு நம்பிக்கையுடன் வாழ வலிமை அளிக்கிறது என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார். தொடர்ந்து தனது மனைவிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி கூறிய அவர் இந்த இழப்பினால் பெரும் கஷ்டத்தில் இருக்கிறோம். எனவே இந்தக் கடினமான நேரத்தில் தனிமையை விரும்புவதாக ரொனால்டோ மற்றும் ரோட்ரிக்ஸ் ஆகியோர் கூட்டாக கையொப்பமிட்ட அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.
இதையடுத்து கர்ப்பத்திலும் கலையாத ரொனால்டோ தற்போது கலங்கி நிற்பதாகக் கூறிய அவருடைய ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments