'டைனோசர்ஸ்' பட இயக்குனருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. பிரமாண்டமாக உருவாகும் அடுத்த படம்..!

  • IndiaGlitz, [Thursday,July 27 2023]

எம்ஆர் மாதவன் என்பவர் இயக்கத்தில் உருவாகிய ’டைனோசர்ஸ்’ என்ற திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை அடுத்து இந்த படம் பிரமாண்டமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம்ஆர் மாதவன் இயக்கத்தில் ’டைனோசர்ஸ்’ என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சிறப்பாக நடந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்து பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் பாராட்டினார்.

இந்த நிலையில் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் எம்ஆர் மாதவனுக்கு அடுத்த படம் கிடைத்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. மெகா பட்ஜெட்டில் பெரிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதால் இந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.