தம்பதிகளுக்கு..... உடலுறவில் கூடுதல் சுவாரசியம் தரும் விஷயங்கள் என்னென்ன....?
Send us your feedback to audioarticles@vaarta.com
உடலுறவு என்பது மனிதர்கள் தங்களின் உடல் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், அடுத்த சந்திதிகளை உருவாக்கவும் காலம் காலமாக நடந்து வரும் ஒரு இயல்பான ஒன்றாகும். ஆனால் காலப்போக்கில், மக்கள் தங்களுக்கேற்றவாறு கலாச்சாரத்தை மாற்றிக்கொண்டும், இதை தவறான கண்ணோட்டத்துடனும் பார்க்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். ஆண், பெண் என இருபாலரும், தங்களுடைய பாலியல் ஆசைகளை மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்த ஏராளமான விஷயங்கள் காமசூத்திரா-வில் கூறப்பட்டுள்ளன. இதில் உள்ள சில ரகசியங்கள்,சில குறிப்புகளை நீங்கள் பின்தொடர்ந்தால் மற்றும் முயற்சித்தால் தம்பதிகளின் பாலியல் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். அந்த சுவாரசிய விஷயங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
ஃபோர்ப்ளே:
இது உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முக்கியமான ஒரு செயல்பாடாகவும், நெருக்கமான ஒரு செயலாகவும் கருதப்படுகிறது. தம்பதிகளுக்கு இடையே பாலுணர்வை தூண்டுவதற்கும், உடலுறவை சிறப்பாக்குவதற்கும்
ஃபோர்ப்ளே பயனுள்ளதாக இருக்கும். இது கூட்டாளியிடம் நம்பிக்கையையும், இணைப்பையும் ஏற்படுத்துகிறது.
இது உடலுறவிற்கு அடிப்படையானது என்றாலும், உங்களுக்கு சிற்றின்பத்தையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது.
1. உங்கள் பாட்னரின் மனநிலையை அறிந்துகொள்ளுங்கள்
2. உடலை முத்தமிடலாம்.
3. அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கொண்டு பேசுவது
4. தூண்டுதல் முறையில் கூட்டாளியுடன் விளையாடுங்கள்
கூட்டாளரை தழுவலாம்:
தம்பதிகள் அவர்களின் கூட்டாளரைத் தழுவுவது என்றால், உடலை தொடுவதும், கட்டிப்பிடிப்பதும் இதில் அடங்கும்.
இம்முறையானது இருவருக்கும் சிற்றின்பத்தை தருவது மட்டுமில்லாமல், தானாகவே தம்பதிகளுக்கு காம உணர்வுகளை ஏற்படுத்தும். இந்த அரவணைப்பு மற்றும் தொடுதல் அவர்களுக்கு இடையில் அன்பான சூழலை உருவாக்கும். ஆணுக்கும், பெண்ணிற்கும் குறிப்பிட்ட இடங்களை தொடும் போது, பாலியல் உணர்வு உண்டாகும். இதுகுறித்து உங்கள் துணையிடம் கேட்டறிந்தும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
முத்தங்கள் :
ஆண், பெண் என இருபாலருக்கும் பிடித்தமான ஒரு காதல் நிலை முத்தங்கள் பரிமாறுவது எனலாம். முத்தமிடுவது என்பது மெதுவாகவும், துணையின் விருப்பத்திற்கு தகுந்தவாறும் இருந்தால், அது சிறப்பான ஒரு வழியாக இருக்கும். முத்தமிடுதல் உடலுறவின் துவக்கமாகவும், தம்பதிகளுக்கு அதீத சிற்றின்பத்தையும் தரக்கூடியது. உதட்டுடன், உதடுகள் முத்தமிடுகையில் இது கூட்டாளருக்கு தீவிரத்தை அதிகரிக்க செய்யும். இது உடலுறவு நடக்க, கூட்டாளரை இயக்க மிகச்சிறந்த வழியாக அமையும்.
நகக் கீறல்கள்:
பெண்கள் பெரும்பாலும் தங்கள் துணையின் உடலை நகங்களால் கீற விரும்புகிறார்கள். முத்தங்களுக்கு பின் இந்த உணர்வானது மிகக்கவர்ச்சியானதாக அமையும். நகங்களால் பெண்கள் கீறும்போது, அது துணைக்கு சிறுவலியை ஏற்படுத்தினாலும், உங்கள் மேல் இன்னும் ஈர்ப்பை ஏற்படுத்தும். உங்களை இறுக்கப்பற்றிக்கொள்ளவே கூட்டாளி விரும்புவார்கள். இது உடலுறவிற்கு உங்களை இன்னும் நகர்த்திச் செல்லும்.
கடிப்பது :
கடித்தல் என்பது மெல்லிய உணர்வாக நடக்கும் போது, அது துணைக்கு பாலியல் உணர்வை தூண்டுகிறது. உங்களுடைய கூட்டாளரின் அந்தரங்க பகுதிகளை விருப்பத்துடன் கடிப்பது, அவர்கள் உங்கள் மேல் ஆதிக்கம் செலுத்தவும், மேலும் இயக்கவும் உதவுகின்றது. உடலுறவில் முக்கிய ஒன்றாகவும், சுவாரசியமான காம உணர்வாகவும் இது பார்க்கப்படுகிறது.
கூட்டாளரிடம் பணிதல்:
துணையுடன் நீங்கள் ஆதிக்கம் காட்டி வந்தாலும், அவர்களிடம் அடிபணிவது உங்களுக்கு உடலுறவில் சிற்றின்பத்தையும், திருப்திகரமான உணர்ச்சியையும் தரக்கூடியது. இதில் அடிபணிந்து போவது ஆண், பெண் என யார் வேண்டுமானாலும் இருக்கலாம். இதை நீங்கள் மாற்றி செய்வதன் மூலம், பல்வேறு பாலியல் கற்பனைகளும் உங்களுக்கு தோன்றி உடலுறவை மேம்படுத்தும். கூட்டாளியுடன் ஆக்கிரமிப்புடன் நடந்து கொள்வது, ஆதிக்கம் செலுத்துவது பாலியல் உறவை இன்னும் சுவாரசியமாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றும். இந்த செயல்கள் தம்பதிகளுக்கு இடையில் புத்திசாலித்தனமாகவும், கவர்ச்சிகரமானதாகவும் இருக்கும்.உடலுறவுக்கு முன் இது சார்ந்த விஷயங்களை உங்கள் துணையுடன் பேசுவதும், அவர்களுடன் விளையாடுவதும், இதில் நாட்டம் இல்லாதது போல் இருப்பதும் இன்னும் உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த உதவும், கூட்டாளரை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments