close
Choose your channels

ஹீரோயின் இல்லாமல் நடிக்கும் ரொமான்ஸ் நாயகன்?

Thursday, September 10, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான சித்தார்த் நடித்த 'எனக்குள் ஒருவன்' படத்திற்கு பின்னர் அவர் நடித்துள்ள 'ஜில் ஜங் ஜக்' என்ற திரைப்படம் முடிவடையும் நிலையில் உள்ளது. தமிழ் சினிமாவின் ரொமாண்டிக் ஹீரோ என்று வர்ணிக்கப்படும் சித்தார்த் இந்த படத்தில் ஹீரோயின் இல்லாமல் நடிக்கின்றார் என்பது ஒரு ஆச்சரியமான தகவல்

கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தை அடுத்து சித்தார்த் நடித்துள்ள முழுநீள நகைச்சுவை படம்தான் இந்த 'ஜில் ஜக் ஜங்கு' என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பழம்பெரும் நடிகர் ராதாரவி நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் தீரஜ் வைத்தி இயக்கியுள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே 'அப்புச்சி கிராமம்' என்ற படத்தில் இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டிரைலர் தயாராகி வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. 'வைகைப்புயல்' வடிவேலு பயன்படுத்திய 'ஜில் ஜங் ஜக்கு' என்ற வசனத்தையே டைட்டிலாக வைத்துள்ள இந்த படத்தின் தயாரிப்பாளரும் சித்தார்த் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment