நவம்பரில் வெளியாகும் காதல் காவியம் 'பனாரஸ்'

  • IndiaGlitz, [Saturday,September 03 2022]

புதுமுக நடிகர் ஜையீத் கான், பாலிவுட் நடிகை சோனல் மோன்டோரியோ முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் காதல் காவியமான 'பனாரஸ்' திரைப்படம், நவம்பர் மாதம் நான்காம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரும், பல விருதுகளை வென்ற படைப்பாளியுமான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்'. ஜையீத் கான் மற்றும் சோனல் மோன்டோரியோ கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். காதலை முன்னிலைப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை என். கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

புனித தலமான காசியை கதைக்களப் பின்னணியாக கொண்டு இன்னிசையுடன் கூடிய காதல் காவியமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், 'பனாரஸ்' திரைப்படம் நவம்பர் நான்காம் தேதி முதல் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

More News

'போட்றா வெடியை': 'தளபதி 67' படத்தில் இணைகிறாரா 'விக்ரம்' நடிகர்?

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'வேட்டையாடு விளையாடு 2': கமல் கேள்விக்கு கவுதம் மேனன் கூறிய பதில்!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வேட்டையாடு விளையாடு' என்ற திரைப்படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில்

'குக் வித் கோமாளி' புகழுக்கு இது இரண்டாம் திருமணமா? முதல் திருமண புகைப்படம் வைரல்!

'குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தனது நீண்ட நாள் காதலி பென்சியாவை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்

அஜித்துடன் இமயமலையில் பைக் பயணம்: மஞ்சுவாரியர் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

நடிகர் அஜீத் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஏகே 61' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தனது நண்பர்களுடன்

'இது நடந்தால் மட்டுமே இரண்டாம் பாகம்; 'வெந்து தணிந்தது காடு' குறித்து கெளதம் மேனன்

 சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் டிரைலர் நேற்று