விஜய்யுடன் மீண்டும் இணைந்த பிரபல காமெடி நடிகர்

  • IndiaGlitz, [Monday,June 13 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'ஜில்லா' மற்றும் 'புலி' ஆகிய படங்களில் நடித்த பிரபல காமெடி மற்றும் குணசித்திர நடிகர் தம்பி ராமையா தற்போது விஜய் 60' படத்திலும் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தில் தம்பி ராமையா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு தாய்மாமனாக நடித்து வருவதாகவும், விஜய்-கீர்த்தி சுரேஷ் காதலை சேர்த்து வைக்கும் வித்தியாசமான கேரக்டரில் அவர் தனது வழக்கமான காமெடி நடிப்பை வெளிப்படுத்தி வருவதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை 'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கி வருகிறார்.