அன்புக்குரியவர் பிறந்தநாளில் கேக் ஊட்டும் நடிகை ரோஜா!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா தனது அன்புக்குரியவர் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கேக் ஊட்டும் காட்சிகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ரோஜா கடந்த 2002ஆம் ஆண்டில் பிரபல இயக்குனர் ஆர்கே செல்வமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று ஆர்கே செல்வமணி அவர்கள் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரை உலக பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ரோஜா தனது அன்புக்குரிய கணவர் ஆர்கே செல்வமணி அவர்களுக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும் ரோஜா - செல்வமணி தம்பதிகளின் குழந்தைகளும் தங்களது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout