கிளாமரில் கலக்கும் 'ரோஜா' சீரியல் நாயகி: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Thursday,May 27 2021]

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ‘ரோஜா’ என்பதும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே. அர்ஜுன் என்ற வழக்கறிஞரை அனாதை இல்லத்தில் வளர்ந்த ரோஜா என்பவர் சந்தித்து, இருவருக்கும் ஏற்பட்ட காதலும் அதன் பின்னர் அர்ஜூன் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்த சீரியலின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் டைட்டில் ரோலில் பிரியங்கா நால்காரி என்பவர் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா 3’ படத்திலும் தெலுங்கில் ஒருசில சில படங்களில் நடித்திருந்தாலும் ‘ரோஜா’ சீரியலில் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது அப்பாவித் தனமான முகம், அருமையான நடிப்பு, அர்ஜூன் சார் அர்ஜூன் சார் என்று காதலுடன் கொஞ்சி அழைப்பது ஆகியவை ரசிகர்களை கவர்ந்து உள்ளதால் இவருக்கு என ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரியங்கா நால்காரி சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நல்ல வரவேற்பையும் லைக்ஸ்களையும் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென பிரியங்கா நால்காரி தனது சமூக வலைத்தளத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘ரோஜா’ சீரியலில் அடக்க ஒடுக்கமாக குடும்ப பாங்கான பெண்ணாக பார்த்த இவரா இப்படி? என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பினாலும் அவரது இந்த புகைப்படங்களை ரசித்து லைக்ஸ்களை அள்ளி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.