'ரோஜா' சீரியல் சிபு சூரியன் மகனா இவர்? வைரல் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சன் டிவியில் ஒளிபரப்பான ’ரோஜா’ என்ற சீரியலில் நாயகனாக நடித்த சிபு சூரியன் தனது மகனின் பிறந்த நாளை முன்னிட்டு புகைப்படம் வெளியிட்டுள்ள நிலையில் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
சன் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பான சீரியல் ’ரோஜா’ என்பதும் இந்த சீரியலில் சிபு சூரியன், பிரியங்கா நல்காரி உள்பட பலர் நடித்திருந்தனர். இந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு முடிந்த நிலையில் நான்கு வருடங்களுக்கு மேல் இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலை அடுத்து ’பாரதி கண்ணம்மா 2’ சீரியலில் சிபு சூரியன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிபு சூரியன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சற்றுமுன் அவர் தனது மகனின் பிறந்த நாளை முன்னிட்டு மகனுக்கு வாழ்த்து கூறும் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் ’உன்னை போன்ற ஒரு மகனை பெறுவதற்கு நான் என்ன அதிர்ஷ்டம் செய்தேன் என்று தெரியவில்லை. அதை நினைத்து பல நேரங்களில் நான் ஆச்சரியப்படுகிறேன். என் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆசீர்வாதமாக கடவுள் இருந்ததற்கு ஒரே சாட்சி உன்னை எனக்கு கொடுத்தது தான். நீ என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளாய். அதற்காக நான் நன்றி கூறுகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பு மகனே, உன்னை நான் என்றும் விரும்புகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்து சிபு சூரியன் மகனுக்கு வாழ்த்து கூறியுள்ள ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா? இவருக்கு திருமணம் நடந்ததே எங்களுக்கு தெரியாதே? என கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com