செல்வமணியை இந்த ஒரு காரணத்திற்காக திருமணம் செய்ய மறுத்த ரோஜா!

இந்த ஒரே ஒரு காரணத்திற்காக செல்வமணியை நான் திருமணம் செய்ய மறுத்தேன் என்று நடிகை ரோஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகை ரோஜா, பிரபல இயக்குனர் ஆர்கே செல்வமணியை கடந்த 2002ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். செல்வமணி இயக்கத்தில் உருவான ’செம்பருத்தி’ என்ற படத்தில் அறிமுகமான ரோஜா, அதன்பின்னர் ‘அதிரடிப்படை’, ‘ராஜமுத்திரை’, ‘மக்கள் ஆட்சி’, ‘அசுரன்’ உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தனது திருமணம் குறித்த மலரும் நினைவுகளை சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை ரோஜா கூறியபோது, ‘செல்வமணி குறித்த ஒரே ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடன் அவரை திருமணம் செய்ய நான் மறுத்தேன்’ என்று கூறியுள்ளார்.

செல்வமணி அப்போது பெரிய இயக்குனராக இருந்தாலும் பார்ப்பதற்கு ஒல்லியாக இருப்பார் என்றும், அதனால் அவரது வயது மிகவும் குறைவாக தான் இருக்கும் என்று நான் நினைத்து காதலித்தேன் என்றும், அதன் பிறகு ஒரு பிறந்தநாளின் போது அவர் தனது வயதை கூறியபோது என்னை விட 10 வயது அதிகம் ஆக இருந்தார் என்பது தெரிந்ததும் உடனே நான் அழுது இவரைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

அதன்பிறகு ரோஜாவின் அண்ணன் அவரை திட்டியதோடு காதலிக்கும் போது வயது பார்த்தா காதலித்தாய்? அவரைப் பார்ப்பதற்கு வயதானவர் போன்றா தெரிகிறது என்று கூறி என்னை சமாதானப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர் என்றும் ரோஜா கூறினார். அவரது இந்த பேட்டியை தற்போது வைரலாகி வருகிறது.