'ரோஜா' மதுபாலாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? ஹீரோயினியாக நடிப்பாரா?
- IndiaGlitz, [Sunday,August 01 2021]
’ஜென்டில்மேன்’ ’ரோஜா’ உள்பட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த நடிகை மதுபாலா தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் மதுபாலாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? என்று ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
கே பாலச்சந்தர் இயக்கிய ’அழகன்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மதுபாலா. அதன்பின் ’வானமே எல்லை’ ’ரோஜா’ ’ஜென்டில்மேன்’ ’செந்தமிழ்செல்வன்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார். அதேபோல் மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் அவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை மதுபாலா கடந்த 1999ஆம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அமயா மற்றும் கெயா ஆகிய 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் மதுபாலா, சமீபத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, மகளை மிஸ் செய்வதாக கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ’ரோஜா’ படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் கண்டிப்பாக இவரை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என்றும் அந்த அளவுக்கு அழகாக இருக்கிறார் என்றும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.