நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி… கணவர் கூறிய தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர் நடிகை ரோஜா. அவர் தற்போது ஆந்திர அரசியலில் ஒரு முக்கியமான அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார். அம்மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் என்பதை விட தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு கர்ப்பப்பையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகவும் அங்கு 2 அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டு தற்போது நல்ல உடல்நலத்துடன் ஓய்வு எடுத்து வருவதாகவும் அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்து உள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 1992 ஆம் ஆண்டு அறிமுகமானவர்தான் நடிகை ரோஜா. அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்த இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு அரசியலில் ஆர்வம் காட்டிய இவர் தற்போது ஆந்திர அரசியலில் ஒரு முக்கியப் புள்ளியாக வளர்ந்துள்ளார்.
கடந்த 2014 ஆம் அணடு ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் நின்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றிப் பெற்று தற்போது ஒரு முக்கியத் துறையின் தலைவராகவும் பங்கு வகித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டு அதுதொடர்பாக 2 அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டு நல்ல உடல்நிலையுடன் ஓய்வெடுத்து வருவதாக அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்து இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com