நேரடியாக யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகும் 'ரோஜா 2'.. சூப்பர் அறிவிப்பு..!
- IndiaGlitz, [Friday,December 13 2024]
சன் டிவியில் ஒளிபரப்பான 'ரோஜா’ என்ற சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ’ரோஜா 2’ நேரடியாக தயாரிப்பு நிறுவனத்தின் YouTube சேனலில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சன் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய 'ரோஜா’ சீரியல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும், இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி மற்றும் அவரது கணவர் ஷிபு சூரியன் ஆகிய இருவரும் நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களது கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்ததால், டிஆர்பியில் முன்னணி இடத்தில் இந்த தொடர் இடம் பெற்றது.
இந்த நிலையில், ரோஜா சீரியலின் தயாரிப்பு நிறுவனமான சரிகமபதநி தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளது. முதல் பாகத்தில் நடித்த பிரியங்கா நல்காரி, இரண்டாம் பாகத்திலும் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்றும், இந்த தொடரில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
’ரோஜா 2’ சீரியலின் முன்னோட்ட காட்சி இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள நிலையில், இந்த சீரியல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகாமல், தயாரிப்பு நிறுவனத்தின் YouTube சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.