பேட்டிங்கில் எதையுமே மாத்தாதீங்க… நட்சத்திர வீரருக்கு குட் அட்வைஸ் கொடுத்த முன்னாள் கேப்டன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருந்து வரும் ரோஹித் சர்மா சமீபகாலமாக ஃபாமிலேயே இல்லை எனும் அளவிற்கு தொடர்ந்து சொதப்பி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டின் போதும் இவரது பேட்டிங் சொல்லும் அளவிற்கு இல்லை. முதல் இன்னிங்ஸில் 6 ரன்களில் அவுட்டான ரோஹித் சர்மா 2 ஆவது இன்னிங்ஸில் 12 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதற்கு முன்பு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலும் மோசமாக விளையாடினார். இந்நிலையில் அவர் ஆடிய கடைசி 8 டெஸ்ட் கிரிக்கெட் மேட்ச்களில் எத்தனை ரன்கள் எடுத்தார் என்ற கணக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடைசியாக ஆடிய 8 டெஸ்ட் மேட்ச்களில் அவர் 6, 21, 26, 52, 44, 6, 12 என்ற ரன்களை எடுத்து ஆட்டம் இழந்து இருக்கிறார். இதனால் ரோஹித்திடம், நீங்க எப்போது ஃபாமிற்கு வருவீர்கள் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமார்ச்சாரி ஸ்ரீகாந்த் ரோஹித் சர்மாவிற்கு ஒரு நல்ல அட்வைஸையும் உற்சாகத்தையும் கொடுத்து இருக்கிறார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “ரோஹித் ஒரு கிளாஸ் ப்ளேயர். அவர் தனது பாணியுடன் டிங்கர் செய்யக்கூடாது. அவரது இயல்பான விளையாட்டை தொடர வேண்டும். அவர் ஒரு அனுபவமிக்க ஆட்டக்காரர். ஒரு முறை அவர் ஆடுகளத்தில் நின்றுவிட்டால் போதும். பின்பு ரன்கள் தானாக வரும். பின்பு ரோஹித் விளையாடுவதை பார்ப்பதற்கே அதிரடியாக இருக்கும்” எனத் தெரிவித்து உள்ளார்.
இதேபோல சில முன்னாள் வீரர்களும் ரோஹித்துக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அனஷுமான் கியூக்வாட், பழைய ஃபார்மில் பார்க்க விரும்புவதாகக் கூறியுள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் லஷ்மனும், ரோஹித் குறித்து சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில் ஒரு பேட்ஸ்மேனாக பந்து வீச்சாளர்கள் உங்களை எங்கே தாக்கப்போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ரோஹித் இன்னும் கொஞ்சம் கவனமாக விளையாட வேண்டும் என்றும் பழைய பார்மில் எதிர்ப் பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா, பேட்டிங்கில் ஜொலிப்பார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர். தற்போது டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கிற்காக களம் இறங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com