விராத் கோஹ்லிக்கு ஓய்வு: புதிய டி20 கேப்டன் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டனாக இருந்த விராத் கோலி ராஜினாமா செய்ததையடுத்து ரோகித் சர்மா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமன்றி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விராத் கோஹ்லி, பும்ரா உள்பட ஒருசில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது என்பதும் இந்த தொடருக்கான இந்திய அணி சற்று முன் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டனாக கேஎல் ராகுல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் ( துணை கேப்டன்), ருத்ராஜ், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷான், வெங்கடேஷ ஐயர், சாஹல், அஸ்வின், அக்சர் பட்டேல், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷா பட்டேல், முகமது சிராஜ்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஞ்சியில் இரண்டாவது டி20 போட்டி நவம்பர் 19ஆம் தேதியும், கொல்கத்தாவில் 3வது டி20 போட்டி நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com