ரோஹித் சர்மா, ரஹானோ, ஷர்துல் வருகையால் களைக்கட்டும் சென்னை… குவாரண்டைன் இருக்குமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் இங்கிலாந்துக்கு இடையிலான இந்திய கிரிக்கெட் அணியின் முதல் 2 டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தற்போதே துவங்கி விட்ட நிலையில் நேற்று இந்தியக் கிரிக்கெட்டின் அணியின் முன்னணி வீரர் ரோஹத் சர்மா, ரஹானே மற்றும் இளம் வீரர் ஷர்துல் தாகூர் போன்றோர் சென்னைக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப் பட்டதாகவும் மேலும் 6 நாட்கள் குவாண்டைனில் வைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து இன்று கேப்டன் வீராட் கோலி சென்னைக்கு வர உள்ளார். இந்தப் போட்டிக்காக இலங்கை தொடர் போட்டியில் கலந்து கொள்ளாத இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பே சென்னைக்கு வந்து விட்டார். அவர் சென்னை லீலா பேலஜ் ஹோட்டலில் தனிமைப்படுத்தப் பட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு ஒதுக்கப்பட்ட அறை மிகவும் சிறியதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் சமூக வலைத்தளப் பக்கத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் இலங்கை தொடர் போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து வீரர்கள் மிக விரைவில் சென்னைக்கு வர உள்ளனர். அவர்கள் வந்ததும் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு நேரடியாக டெஸ்ட் தொடர் போட்டியில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. இந்தியா-இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அதில் முதற்கட்டமாக சென்னையில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும் பிப்ரவரி 13 ஆம் தேதி 2 ஆவது டெஸ்ட் போட்டியும் நடைபெற இருக்கிது.
இந்தப் போட்டிகளை முடித்துக் கொண்டு இரு அணிகளும் அகமதாபாத் செல்ல இருக்கின்றன. அங்கு பிப்ரவரி 24 ஆம் தேதி 3 ஆவது டெஸ்ட் போட்டியும் மார்ச் 4 ஆம் தேதி 4 ஆவது டெஸ்ட் போட்டியும் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே ஆஸ்திரேலிய வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணி மீதான நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. இதனால் இந்திய ரசிகர்கள் மேலும் உற்சாகத்தோடு இந்தப் போட்டிகளை கவனிக்கத் தொடங்கி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com