எந்த நடிகையும் தைரியமாக புகார் கூறலாம்: நடிகர் சங்க கூட்டத்தில் ரோகிணி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் யாராக இருந்தாலும் தைரியமாக நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கலாம் என்றும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ரோகிணி பேசியுள்ளார்.
நடிகைகள் பாலியல் புகார் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பாக கேரளாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பின்னர் பல பெரிய நட்சத்திரங்களை மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இதில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் புகார் அளிக்கலாம் உள்பட பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின் நடிகை ரோகிணி பேசியபோது ’2019 ஆம் ஆண்டில் தென்னிந்திய திரையுலகில் இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டது, நடிகர் நடிகைகள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் இந்த கமிட்டியில் புகார் அளிக்கலாம், வழக்கறிஞர்கள், என்.ஜி.ஓக்கள் உள்பட பலர் உள்ள இந்த கமிட்டியில் இருப்பதால், புகார் தெரிவித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும், புகாருக்கு உள்ளான நபர் ஐந்து ஆண்டுகள் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் புகார் கொடுத்த நபரின் பெயர் வெளியே தெரிவிக்கப்படாது என்றும் எனவே எந்த நடிகையாக இருந்தாலும் தைரியமாக புகார் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் நடிகை மீதான புகார் பெரிதுபடுத்தப்படுகிறது என்றும் நடிகை கூறும் புகார் மட்டும் திரும்பத் திரும்ப ஊடகங்களில் பேசப்படுகிறது என்றும் எல்லா துறையிலும் பாலியல் அத்துமீறல் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
முன்னதாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறுகையில் ’பொதுக்குழு முன்பாக இருந்த சவால்களை மீறி பொதுக்குழு கூட்டம் நடந்துள்ளது என்றும் மகிழ்ச்சியாக நடந்த இந்த கூட்டத்தில் 10 நாடகக் கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டதாகவும் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments