சிறகடிக்க ஆசை: மனோஜ் விஷயத்தில் ரோகிணி அடக்கி வாசித்து இருக்கலாம்.. அவருக்கே திரும்பும் ஆபத்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த காட்சி என்று வந்துவிட்டது. மனோஜ் கடந்த சில மாதங்களாக வேலையில்லாமல் வெட்டியாக பார்க்கில் உட்கார்ந்து விட்டு, சாப்பிட்டுவிட்டு, தூங்கி விட்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் என்றைக்கு பிடிப்படுவார் என்று பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துனர்.
ஏற்கனவே ஒரு சில முறை பிடிபடும் நிலை வந்தது, ஆனால் அவர் ஏதேதோ சொல்லி தப்பித்துவிட்டார். இந்த முறை முத்து, மனோஜ் வேலை வெட்டி இல்லாமல் பார்க்கில் இருப்பதை வீடியோவாக எடுத்து வந்து வீட்டினர் முன்னிலையில் போட்டு காட்டி விட்ட நிலையில் வீட்டில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. குறிப்பாக ரோகிணி அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று விட்டார். மீனா மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரும் மனோஜ் குறித்து பேசிய பேச்சும் ரோகிணியை வருத்தப்படுத்தியது.
இந்த நிலையில் மனோஜிடம் சற்று ஓவராகவே ரோகிணி நடந்து கொண்டார். உன்னை நான் எப்படி நம்பினேன், நீ எப்படி என்னை ஏமாற்றலாம், உனக்கு வேலை இல்லை என்பது கூட பிரச்சனை இல்லை, ஆனால் உன்னை நம்பிய என்னை ஏமாற்றியது சரியா? உன் அம்மாவிடம் கூட வேலை இல்லை என்பதை சொல்லி இருக்கிறாய், என்னிடம் ஏன் சொல்லவில்லை என புரட்டி எடுக்கிறார்.
சாதாரண வேலை இல்லை என்ற விஷயத்தை மறைத்ததற்கே கோபப்படும் ரோகிணி தான் மறைத்த விஷயத்தை மறந்து விட்டார். விஜயா பெயரில் பார்லர் நடத்துவதாக பொய் கூறிக் கொண்டிருக்கிறார். அதுகூட பரவாயில்லை, ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளதை மறைத்து மனோஜை ரோகிணி திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
இவ்வளவு பெரிய உண்மையை ரோகிணி மறைத்துவிட்டு ஒரு சின்ன உண்மையை மறைத்ததற்காக ரோகினி அவசரப்பட்டு மனோஜ் மீது கோபப்பட்டு விட்டதாகவும் ரோகிணியின் பொய்கள் வெளியே வரும் போது அவர் எங்கே முகத்தை வைத்துக் கொள்வார் என்றும் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதே கருத்தை தான் ரோகிணியின் தோழியும் சொல்கிறார்.
இனிவரும் எபிசோடுகளில் ரோகிணி மற்றும் மனோஜ் குறித்த காட்சிகள் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் முத்துவுக்கு இனி கொண்டாட்டம் தான்..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com