மனைவியுடன் திடீரென முதலமைச்சரை சந்தித்த 'ராக்கிபாய்' யாஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேஜிஎஃப் படத்தில் நடித்த ’ராக்கிபாய்’ யாஷ், தனது மனைவியுடன் முதலமைச்சரை சந்தித்து உள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
கன்னட நடிகர் யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் 1,000 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. டங்கல், பாகுபலி 2 மற்றும் ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களை அடுத்து ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த இந்திய திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறைக்காக மனைவியுடன் கோவா சென்றுள்ளனர் நடிகர் யாஷ். அங்கு கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்தை மனைவியுடன் சென்று சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை கோவா முதல்வர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் யாஷ் கோவா வந்திருப்பதை அறிந்த கோவா முதல்வரே, அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்ததாகவும் அதனால் தான் இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் யாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை கோவாவில் நடத்தவும் முதல் அமைச்சர் யாஷூக்கு வேண்டுகோள் வைத்ததாகவும் கூறப்படுகிறது.
It was a pleasure to meet the KGF superstar, @TheNameIsYash along with his wife Radhika and team at Panaji. pic.twitter.com/oyuR0NRwub
— Dr. Pramod Sawant (@DrPramodPSawant) May 4, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments