ரஜினி தயாரிப்பாளர் படத்தில் தனுஷ்

  • IndiaGlitz, [Wednesday,March 30 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றதோடு விநியோகிஸ்தர்களின் அதிருப்தியையும் சம்பாதித்தது. இந்த படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் ஒரு குறிப்பிட்ட தொகையை விநியோகிஸ்தர்களுக்கு நஷ்ட ஈடாக கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராக்லைன் வெங்கடேஷ் தற்போது மீண்டும் ஒரு தமிழ்ப்படத்தை தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த முறை அவர் ஹீரோவாக தேர்வு செய்தது ரஜினியின் மருமகனும், பிரபல நடிகருமான தனுஷை என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவுள்ள இந்த படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என தெரிகிறது. ஏற்கனவே வடசென்னை படத்தின் மூலம் இணையவுள்ள தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி, இந்த படத்தை முடித்தபின்னர் ராக்லைன் வெங்கடேஷ் படத்தில் மீண்டும் இணையவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.