ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்புகள்.. அசராமல் பதவியேற்ற அஷ்ரப் கனி..! வைரல் வீடியோ.
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஏற்கனேவே அதிபராக இருந்த அஷ்ரப் கனியும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அப்துல்லா அப்துல்லாவும் போட்டியிட்டனர்.
வாக்குச் சீட்டு முறையில் நடத்தப்பட்ட தேர்தலில் அஷ்ரப் கனியே வெற்றி பெற்றார். ஆனால் இந்த தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ளாத அப்துல்லா அப்துல்லா தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது எனவும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் வாக்கு எண்ணிக்கையை மீண்டும் எண்ணி வெளியிட்டது.
அந்த முடிவிலும் 50.64 சதவீதம் வாக்குகள் பெற்று அஷ்ரப் கனியே வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையும் மறுத்த அப்துல்லா தனது ஆதரவாளர்களுடன் நேற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். அதே நேரம் தேர்தலில் வெற்றி பெற்ற அஷ்ரப் கனி தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் காபூலில் நேற்று மாபெரும் பதவியேற்பு விழா நடத்தி பதவியேற்றுக் கொண்டார்.
அவர் பதிவியேற்கும் போது காபூலில் இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது. அவை இரண்டும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளாகும்.மேலும் ஏவுகணைத் தாக்குதல்களும் துப்புச்சூடும் நடந்துள்ளது. மக்கள் எல்லாம் குண்டுவெடிப்பு சத்தத்தினைக் கேட்டு அங்கு இங்கும் சிதறி ஓடினாலும் அஷ்ரப் கனி அசராமல் பதவியேற்றுக்கொண்டார்.
ஐ.எஸ் அமைப்பானது இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ளது. பதவியேற்கும் போதே குண்டு வெடித்தாலும் அஞ்சாமல் பதவியேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. "இந்த நாட்டின் இறையாண்மையை மதித்து புனிதமான இஸ்லாம் மதத்திற்கு கீழ்ப்படிந்து நாட்டைக் காப்பேன். நான் புல்லட் ப்ரூஃப் ஆடை எதுவும் அணியவில்லை. வெறும் சட்டைதான். இந்த குண்டுகளெல்லாம் என்னைக் கொல்லாது. உயிரிழந்தாலும் இங்கு தான் இருப்பேன். மக்களுக்காகவே பணி புரிவேன்" என அஷ்ரப் கனி கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Yugan Surya
Contact at support@indiaglitz.com