ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்புகள்.. அசராமல் பதவியேற்ற அஷ்ரப் கனி..! வைரல் வீடியோ.

  • IndiaGlitz, [Tuesday,March 10 2020]

ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஏற்கனேவே அதிபராக இருந்த அஷ்ரப் கனியும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அப்துல்லா அப்துல்லாவும் போட்டியிட்டனர்.

வாக்குச் சீட்டு முறையில் நடத்தப்பட்ட தேர்தலில் அஷ்ரப் கனியே வெற்றி பெற்றார். ஆனால் இந்த தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ளாத அப்துல்லா அப்துல்லா தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது எனவும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் வாக்கு எண்ணிக்கையை மீண்டும் எண்ணி வெளியிட்டது.

அந்த முடிவிலும் 50.64 சதவீதம் வாக்குகள் பெற்று அஷ்ரப் கனியே வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையும் மறுத்த அப்துல்லா தனது ஆதரவாளர்களுடன் நேற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். அதே நேரம் தேர்தலில் வெற்றி பெற்ற அஷ்ரப் கனி தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் காபூலில் நேற்று மாபெரும் பதவியேற்பு விழா நடத்தி பதவியேற்றுக் கொண்டார்.

அவர் பதிவியேற்கும் போது காபூலில் இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது. அவை இரண்டும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளாகும்.மேலும் ஏவுகணைத் தாக்குதல்களும் துப்புச்சூடும் நடந்துள்ளது. மக்கள் எல்லாம் குண்டுவெடிப்பு சத்தத்தினைக் கேட்டு அங்கு இங்கும் சிதறி ஓடினாலும் அஷ்ரப் கனி அசராமல் பதவியேற்றுக்கொண்டார்.

ஐ.எஸ் அமைப்பானது இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ளது. பதவியேற்கும் போதே குண்டு வெடித்தாலும் அஞ்சாமல் பதவியேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நாட்டின் இறையாண்மையை மதித்து புனிதமான இஸ்லாம் மதத்திற்கு கீழ்ப்படிந்து நாட்டைக் காப்பேன். நான் புல்லட் ப்ரூஃப் ஆடை எதுவும் அணியவில்லை. வெறும் சட்டைதான். இந்த குண்டுகளெல்லாம் என்னைக் கொல்லாது. உயிரிழந்தாலும் இங்கு தான் இருப்பேன். மக்களுக்காகவே பணி புரிவேன் என அஷ்ரப் கனி கூறியுள்ளார்.

More News

பா.ஜ.க. வில் இணையப் போகிறாரா??? மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா

மத்தியப் பிரதேச அமைச்சரவையில் புதிய திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.

வாட்ச் மாதிரி தான் நம்ம பிசினஸ்: ஆர்யாவின் 'டெடி' டீசர்

25 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுவிஸ் நாட்டு வாட்சில காட்டுறா அதே டைம் தான் 100 ரூபாய்க்கு பிளாட்பார்மில் வாங்குற டிஜிட்டல் வாட்சிலும் டைம் காட்டும். ஆனால் அதை ஏன் வாங்குறாங்க தெரியுமா?  

காங்கிரஸ் பிரபலத்தை அடுத்து ரஜினியை சந்தித்த பாஜக பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நிலையில் அவரை தினந்தோறும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை செய்து வருகின்றனர் 

தனுஷின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர்கள்!

இந்த ஆண்டு தனுஷ் நடித்த பட்டாஸ்' திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

பிரபல நடிகரின் படத்தில் வில்லன் ஆனார் கவுதம் மேனன்!

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் 'கோலிசோடா 2' உட்பட ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.