பிரபல நடிகர் இயக்கிய படத்தில் பாடகராகிய ரோபோ சங்கர்
Send us your feedback to audioarticles@vaarta.com
’தீரன் அதிகாரம் ஒன்று’, ’தேவராட்டம்’ உள்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் போஸ் வெங்கட் முதல் முறையாக இயக்கி வரும் திரைப்படம் ’கன்னிமாடம்’. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் ஒரு பாடலை பாடியுள்ளார்
ஹரிசாய் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை முதன் முதலாக தான் பாடி இருப்பதாகவும் இந்த பாடல் மிக அருமையாக வந்துள்ளதாகவும் இந்த பாடல் இன்று மாலை 3 மணிக்கு யூடியூபில் வெளியாக இருப்பதாகவும் இந்த பாடலை கேட்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் என்றும் ரசிகர்களுக்கு ரோபோ சங்கர் வீடியோ ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்த நிலையில் முதன்முதலாக முதன்முதலாக பாடகராக மாறிய ரோபோ சங்கருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது
கிராமத்தில் இருந்து சென்னைக்கு படிக்க வந்த மாணவர்களின் மனநிலை பற்றிய இந்த படத்தில் இளமையான காதலும் இன்றைய இளைஞர்கள் ரசிக்கும் வகையில் காமெடி மற்றும் ரொமான்ஸ் அம்சங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஆடுகளம் நரேன், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், புதுமுகம் வலீனா பிரிசஸ் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
#RoboShankar turns Singer Shankar?? #MoonuKaaluVaaganam - First single from #KanniMaadam releasing today at 3PM.
— Done Channel (@DoneChannel1) February 7, 2020
Stay tuned ?? @RoobyFilms @Hasheer75 @sreeramkarthick @directorBose @rharisai @editor_rizaal @PrabuM72447045@Agnaldavid1 @divomovies pic.twitter.com/7azkQE7erX
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments