'ஆட்டோக்காரன்' பாடலை பாடிய பிரபல காமெடி நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' படத்தில் இடம்பெற்ற 'நான் ஆட்டோக்காரன்' பாடலை அடுத்து ஆட்டோக்காரர்களை பெருமைப்படுத்தும் பாடல் ஒன்றை காமெடி நடிகர் ரோபோ சங்கர் பாடியுள்ளார்.
பிரபல குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட் முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வரும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்ற செய்தியை சில நாட்களுக்கு முன் பார்த்தோம். இந்த படத்தில் தான் ரோபோ சங்கர் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது
இந்த பாடலில் ஆட்டோக்காரர்கள் தினமும் சந்திக்கும் அனுபவங்கள், சிக்கல்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ரோபோ சங்கரின் குரல் அனைவருக்கும் பரிச்சயமானது என்பதால் அவரை பாட வைத்ததாகவும் போஸ் வெங்கட் தெரிவித்தார். இந்த பாடலை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹரிசாய் கம்போஸ் செய்துள்ளார்.
ஒரு நிஜ ஆட்டோக்காரர் ஒரு பாட்டு பாடினால், அந்த பாடலில் ஸ்ருதி, தாளம் எல்லாம் இருக்காது. அதேபோல் இந்த பாடல் மிக இயல்பாக இருக்கும் என்றும் போஸ் வெங்கட் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout