சூர்யாவின் 'S3' படத்தில் தனுஷின் 'மாரி'

  • IndiaGlitz, [Saturday,January 23 2016]

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'S3'படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பொள்ளாச்சி மற்றும் வெளிநாடுகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்கும் ரோபோசங்கர், சமீபத்தில் வெளியான 'மாரி' படத்தில் தனுஷின் கெட்டப்பில் தோன்றுகிறார். தனுஷ் அந்த படத்தில் வைத்திருந்த தாடி, மீசை, ஹேர்ஸ்டைல் மற்றும் கண்ணாடி ஆகிய கெட்டப்பில் 'S3'படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த ஸ்டில் ஒன்று தற்போது சமூக இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், ராதிகா, ரோபோசங்கர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ப்ரியன் ஒளிப்பதிவாளராகவும், வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகின்றனர்.

More News

மொரீஷியஸ் தீவில் படமாகும் முதல் முழு இந்திய படம். கமலின் மெகா திட்டம்

'தூங்காவனம்' படத்திற்கு முன்பே கமல் ஒரு ஆக்சன் த்ரில்லர் படத்தில் நடிக்க முடிவு செய்து அதற்கான லோகேஷனை மொரீஷியஸ்...

'கெத்து' பட வரிவிலக்கு வழக்கு. சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான 'கெத்து' திரைப்படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்க மறுத்துவிட்டது...

சிம்பு படத்தின் பத்து நாள் படப்பிடிப்பு

பீப் பாடல் விவகாரத்தில் சிக்கி சிம்பு தனது இமேஜை இழந்ததாக கூறப்பட்டாலும் அவருடைய படங்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது...

பிரபுசாலமன் - தனுஷ் படத்தில் கணேஷ் வெங்கட்ராமன் ரோல் என்ன?

தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது...

ஒரே நேரத்தில் அண்ணன் - தம்பி படங்களில் சந்தோஷ் நாராயணன்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி', விஜய்யின் 60வது படம், , சந்தானம் நடிக்கவுள்ள 'சர்வம் சுந்தரம்' உள்பட பல முன்னணி நடிகர்களின்...