உண்மையிலேயே நல்ல செய்தி சொன்ன இந்திரஜா.. ரோபோ சங்கர் குடும்பத்தினர் மகிழ்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளதை அடுத்து ரோபோ சங்கர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா மற்றும் கார்த்திக் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்த நிலையில் சமீபத்தில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் இந்த ஜோடி கலந்து கொண்டது.
அப்போது நடுவர் ராதா ’குழந்தை எப்போது’ என்ற கேட்டபோது எங்கள் இரண்டு பேர் வீட்டில் ஒரே ஒரு குழந்தை என்பதால் இரு வீட்டாரும் எங்கள் குழந்தையை எதிர்பார்க்கின்றனர் என்றும் சீக்கிரமே அது நடக்கும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அதே மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தற்போது அவர் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ள நிலையில் விஜய் டிவி குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் ரோபோ சங்கர் தான் தாத்தாவாக போகிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்த ப்ரோமோ வீடியோ விஜய் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் ரசிகர்களும் இந்திரஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தருணம்.. ❤️
— Vijay Television (@vijaytelevision) August 10, 2024
Mr & Mrs Chinnathirai Season 5 - சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல. #ShivaKumar #MeeraKrishnan #Indraja #Karthick #NanjilVijayan #Maria #Naveen #Sowmya #VJAshiq #Sonu #MrMrsChinnathirai5 #MMC #VijayTV #VijayTelevision pic.twitter.com/LNJ21bMbln
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments