வைகோவை விமர்சித்தாரா ரோபோசங்கர்
- IndiaGlitz, [Tuesday,July 25 2017]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்து நகைச்சுவை நடிகர் ரோபோசங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக நேற்றும் இன்று டுவிட்டர் இணணயதளத்தில் செய்தி பரவி வருகிறது. இதற்கு மதிமுக தொண்டர்களும் ரோபோசங்கரை பதில் தாக்குதல் செய்து வந்த நிலையில் சற்று முன் ரோபோசங்கர் தனது டுவிட்டரில், தான் வைகோ அய்யா குறித்து எந்த விமர்சனமும் செய்யவில்லை என்றும் அது தன் பெயரில் உள்ள போலியான டுவிட்டர் பக்கம் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது: ரோபோ சங்கர் என்ற என்னுடைய பெயரில் ஒரு போலியான டுவிட்டர் ஐடி மூலம் அய்யா வைகோ குறித்து நான் பேசியதாக வதந்தி பரவி வருகிறது. அது என்னுடைய ஐடி கிடையாது. இதுகுறித்து எனக்கு நிறைய போன் அழைப்புகள் வருகிறது. அவர்களிடத்தில் நான் விளக்கம் அளித்து வருகிறேன். அந்த ஐடியில் இருந்து வெளிவரும் எந்த செய்திக்கும் நான் பொறுப்பு இல்லை. இந்த விஷயம் மட்டுமின்றி இதுபோன்று நிறைய விஷயங்களில் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படும்படி சிலர் செய்து வருகின்றனர். இந்த வீடியோ மூலம் அந்த செயல்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பதை பதிவு செய்து கொள்கிறேன். காவல்துறை அதிகாரிகள் தயவுசெய்து இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று ரோபோ சங்கர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் வைகோ குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த அந்த போலியான ஐடி தற்போது செயலிழந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
— Robo Sankar (@iamrobosankar) July 25, 2017