தங்கமங்கை கோமதிக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு கொடுக்கும் காமெடி நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் தமிழகத்தின் திருச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து. ஏழை விவசாயி மகளாக பிறந்து, இடைவிடாத பயிற்சி, தளராத தன்னம்பிக்கையின் காரணமாக இன்று உலகமே அவரை போற்றி புகழ்கிறது
இந்த நிலையில் தங்கம் வென்ற கோமதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல அரசியல் பிரபலங்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தங்க மங்கை கோமதிக்கு காமெடி நடிகர் ரோபோ சங்கர் ஒரு லட்சம் ரூபாய் அன்புப்பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார். கோமதி இந்தியா திரும்பியவுடன் இந்த பரிசை அவர் நேரில் வழங்குவார் என தெரிகிறது. தானும் ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்ததால் கோமதி சந்தித்த வறுமையின் துயரம் தனக்கு தெரியும் என்றும், கோமதி தனது தந்தையை இழந்திருந்தாலும், தன்னம்பிக்கையை இழக்காமல் செய்த இந்த சாதனை மிகப்பெரியது என்றும் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments