நல்ல மனுஷன்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்களே.. ராபர்ட் மாஸ்டர் என்ன செய்றார் பாருங்க?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து சீசன்களிலும் காதல் விவகாரம் இருக்கும் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை அது அதிகப்படுத்தும் என்பதும் தெரிந்ததே.
அந்த வகையில் இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர் ரக்சிதாவை பார்க்கும் பார்வையிலேயே காதல் ரசம் சொட்டச் சொட்ட உள்ளதாக ஏற்கனவே நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக நேற்று சாப்பாடு விஷயத்தில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரக்சிதா ஆகிய இருவரும் செல்ல சண்டை போட்டுக்கொண்டது க்யூட்டாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி நிலையில் அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ராபர்ட் மாஸ்டரை நல்ல மனுஷன்னு தப்பா நினைச்சிட்டோமே என்று கமெண்ட் காமெடியாக கமெண்ட் அளித்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் ரக்சிதா சாதம் வடித்துக்கொண்டிருக்கும் போது அதிலிருந்து கிளம்பும் ஆவி கேமரா மீது படுகிறது. இதனை அடுத்து அவர் கேமராவை கையால் மறைத்து அதில் ஆவி படாதவாறு கேமராவை பாதுகாக்கின்றார்.
ரக்சிதா முகத்தில் ஆவி படாமல் அவர் பாதுகாப்பார் என்று பார்த்தால் அவர் கேமராவை பாதுகாக்கிறாரே என நெட்டிசன்கள் இந்த வீடியோ காட்சிகளுக்கு கமெண்ட் அளித்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#RobertMaster Reels ???? - Unga Alambal thaangala Master ??#BiggBossTamil6 #BBTamil #BiggBossTamil #Rachitha pic.twitter.com/GMzqyI1QRt
— VCD (@VCDtweets) October 31, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com