ரக்சிதாவை இந்த பார்வை பாக்குறாரே.. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வசனத்துடன் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனின் அமைதியான போட்டியாளர் என்றால் ராபர்ட் மாஸ்டர் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பேச வேண்டிய நேரத்தில் சரியான பாயிண்ட் எடுத்து பேசுவதிலும் அவர் தவறுவதில்லை.

இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் ரக்சிதாவை ஏக்கத்துடன் பார்க்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரக்சிதா, விக்ரமனிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்கும் போது அவரை ராபர்ட் மாஸ்டர் பார்க்கும் பார்வை குறித்த வீடியோவை நெட்டிசன்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோவுக்கு பின்னணியாக சிவகார்த்திகேயன், திவ்யா நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் இடம்பெற்ற வசனத்தையும் பின்னணியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

’யோவ் சிவனாண்டி நீ பெத்த பொண்ணாயா இது? எம்புட்டு அழகா இருக்கு? என்ற வசனத்தில் பின்னணியில் அமைந்துள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.