close
Choose your channels

முதல் நாளே ஜிபி முத்துவை அலற வைத்து சக போட்டியாளர்: வீடியோ வைரல்!

Monday, October 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது என்பதும் நேற்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்றைய முதல் நாளே பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கி விட்டது என்பதும் ஒரு சில காமெடி நிகழ்ச்சிகளும் அரங்கேறத் தொடங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்பாவி போட்டியாளராக ஜிபி முத்து பங்கேற்றுள்ளார். இவர் நேற்றைய அறிமுக நாளின்போது, இன்னும் இரண்டு நாட்களுக்கு நீங்கள் வீட்டில் தனியாக இருக்க போகிறீர்கள் என கமல்ஹாசன் கலாய்க்க, அதற்கு ஜிபி முத்து, ‘அப்படி எல்லாம் என்னால் இருக்க முடியாது, எனக்கு பயமாக இருக்கும் என்று அலற தொடங்கினார். ஏவாள் வரும் வரை ஆதாம் காத்து இருக்கக் கூடாதா? என கமல் கேட்டதற்கு ஆதாமா? அவர் யார் என்று அறியாப்பிள்ளையாக ஜிபி முத்து கேட்க ஒரே காமெடியாக இருந்தது.

இந்த நிலையில் இன்றைய முதல் நாளில் ஜிபி முத்து தூங்கிக் கொண்டிருந்தபோது பதுங்கி பதுங்கி வந்த ராபர்ட் மாஸ்டர் அவரது காலை சுரண்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்து படுக்கையிலிருந்து கீழே விழுந்த ஜிபி முத்துவை அஸிம் தூக்கி நிறுத்தினார். இதை பார்த்த அனைத்து போட்டியாளர்களும் சிரிக்க, ஜிபி முத்து காமெடி தான் என இலகுவாக எடுத்துக் கொண்டு அவரும் சிரித்தார்.

முதல் நாளே ஜிபி முத்துவை ராபர்ட் மாஸ்டர் அலற வைத்ததை அடுத்து போகப்போக என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment