கதறியழும் ராபர்ட், சோகமாக பார்க்கும் ரக்சிதா.. என்ன நடந்துச்சு பிக்பாஸ் வீட்டில்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டர் திடீரென கதறி அழுவதும் அவரை ரக்சிதா சோகமாக பார்க்கும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அரண்மனை டாஸ்க் நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்றைய அடுத்த புரமோவில், ‘ராஜவம்சம் மற்றும் அருங்காட்சியகம் என்ற டாஸ்க்கில் அனைவருக்கும் தெரியாத சில உண்மைகள்’ என்று பிக்பாஸ் கூறுகிறார்.
இதனை அடுத்து ஒரு மேப் கொடுக்கப்படுகிறது. இரண்டு கிழிந்த அந்த மேப்கலை ஒன்று சேர்த்து பார்க்கும் ரக்சிதாஅதிர்ச்சி அடையும் காட்சியும் அதன் பின்னரும் கதிரவன், அசீமுக்கு வணக்கம் செலுத்தும் காட்சியும் வருகின்றன.
இதனை அடுத்தே திடீரென சோகமாக அந்த இடத்தைவிட்டு ராபர்ட் மாஸ்டர் வெளியே செல்வதும் அதன்பின் ஓரிடத்தில் உட்கார்ந்து கதறி அழுவதுமான காட்சிகள் உள்ளன. ராபர்ட் மாஸ்டர் அழுவதை தலையில் கை வைத்து சோகமாக உட்கார்ந்து ரக்சிதா பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகள் உள்ளன.
இந்த புரமோவில் இருந்து என்ன நடந்தது என்று தெரியாவிட்டாலும் ராஜா ராணி டாஸ்க்கில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் தெரிய வருகிறது. அந்த திருப்பம் என்ன என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
#Day40 #Promo02 #NowStreaming on #disneyplushotstar #BiggBossTamil #KamalHassan pic.twitter.com/Qlge2AiuPw
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) November 18, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments