ரக்சிதாவுக்கு அம்புவிட கற்று கொடுக்கும் ராபர்ட். வேற லெவல் கெட்டப்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டர் சக போட்டியாளர் ரக்சிதாவுக்கு அம்பு விட கற்றுக்கொடுக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் என்பதும் அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீடே ஒரு அரசசபையாக மாறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரக்சிதா ஆகிய இருவரும் ராஜா ராணியாக நடித்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜா வேடத்தில் இருக்கும் ராபர்ட் மாஸ்டர் ராணி வேடத்தில் இருக்கும் ரக்சிதாவுக்கு அம்பு விட கற்றுக் கொடுக்கும் வீடியோ இன்றைய முதல் புரமோவில் உள்ளது. ஏற்கனவே ரக்சிதா மீது காதல் பார்வையுடன் ராபர்ட் மாஸ்டர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த காட்சியின் ரொமான்ஸ் ரசிக்கும் வகையில் உள்ளது. அதேபோல் ராபர்ட் மாஸ்டருக்கு ராஜா வேடமும், ரக்சிதாவுக்கு ராணி வேடமும் வேற லெவல் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இன்றைய புரமோவில் அரச சபைக்கும் வரும் ராஜா மற்றும் ராணியை படைத்தளபதி அசீம் வரவேற்பது போலவும், ராஜ குடும்பத்தை தொட வேண்டுமென்றால் என் வாளை தாண்டி தான் தொட வேண்டும் என அசீம் பேசும் ஆவேசமான வசனமும் இடம்பெற்றுள்ளது.

மேலும் ராஜா ராபர்ட் மாஸ்டர் ஸ்டைலாக வாளை கையில் எடுக்கும் காட்சியும்,  ராணிக்கு அம்பு விட சொல்லிக்கொடுக்கும் ரொமான்ஸ் காட்சியும் பாகுபலி படத்தை ஞாபகப்படுத்துவது போல் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இறுதியில் சாப்பாட்டில் உப்பு மட்டுமே இருக்கிறது என ராணி கோபப்பட இதனால் ராஜா ஆவேசமாக ஆவேசமாக சீரும் காட்சியும் புரமோவில் இறுதியில் உள்ளது. மொத்தத்தில் இந்த டாஸ்க் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.