லிமிட் தாண்டிருச்சு, வர்றியா, இல்லையா? ரக்சிதாவை செல்லமாக மிரட்டும் ராபர்ட்: க்யூட் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் டாஸ்க் ஒருபக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ராபர்ட் மற்றும் ரக்சிதாவின் க்யூட் காட்சிகள் பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.
ஏற்கனவே இருவரும் மாறி மாறி செல்லச் சண்டைகள் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரக்சிதா மழையில் நனைந்து கொண்டிருக்கும் நிலையில், ‘மழையில் நனையாதே, உள்ளே வா என ராபர்ட் மாஸ்டர் கூப்பிடுகிறார். ஆனால் ’இதோ வருகிறேன் இதோ வருகிறேன்’ என கூறி கொண்டே படுத்துக்கொண்டே மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் ரக்சிதா.
ஒரு கட்டத்தில் ராபர்ட் மாஸ்டர் கடுப்பாகி, ‘போதும் உள்ளே வா, லிமிட் தாண்டிவிட்டது, இப்ப நீ உள்ளே வருகிறாயா இல்லையா? என்று செல்லமாக கண்டிக்கிறார். ஆனாலும் ரக்சிதா வராமல் மழையில் நனைந்து கொண்டே இருக்கிறார்.
மேலும், ‘நாளை கமல் சாரை பார்க்க வேண்டும், உடல் நலம் சரியில்லாமல் போய் விடப் போகிறது, அதனால் உள்ளே வா என்று ராபர்ட் கூற ரக்சிதாஉள்ளே வராமல் மீண்டும் மழையில் நினைக்கிறார். இதனை அடுத்து வருத்தத்துடன் ராபர்ட் மாஸ்டர் உள்ளே செல்வதுடன் இந்த வீடியோ முடிவுக்கு வருகிறது.
ரக்சிதா மீது மிகுந்த கரிசனையுடன் ஒவ்வொரு செயலையும் ராபர்ட் மாஸ்டர் செய்துவருவதை பார்க்கும்போது, இது எங்கே போய் முடியப் போகிறதோ என்று தெரியவில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com