ராபர்ட் உடன் காதலை முறித்து கொண்டாரா நிஜ காதலி?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டர், பிக்பாஸ் வீட்டிற்குள் ரக்சிதாவை சுற்றி சுற்றி வந்து ஒருதலையாக காதலித்து வரும் நிலையில் அவரது நிஜ காதலி அவருடனான காதலை முறித்துக் கொண்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் காதல் ஜோடிகளாக வலம் வந்த அசல் கோலார் மற்றும் நிவாசினி ஆகிய இருவரும் போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில் கடந்த சில வாரங்களாக ரக்சிதாவை ஒருதலையாக காதலிக்கும் ராபர்ட் மாஸ்டர் லீலைகள் பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக ராஜா ராணி டாஸ்க்கில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர் மற்றும் ராணியாக ரக்சிதா நடித்த போது கிடைத்த கேப்பில் எல்லாம் ராபர்ட் மாஸ்டர் புகுந்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டரின் நிஜ காதலியிடம் இருந்து மோதிரம் ஒன்று வந்துள்ளதாக தெரிகிறது. அந்த மோதிரம் ராபர்ட் மாஸ்டர் தனது காதலிக்கு வாங்கிக் கொடுத்த மோதிரம் என தெரிகிறது. பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் லீலைகளை கண்டு கோபமடைந்த அவரது நிஜ காதலி, தன்னுடைய காதலை முறித்துக் கொள்ளும் வகையில் மோதிரத்தை அனுப்பினாரா? அல்லது தன்னுடைய ஞாபகமாக ராபர்ட் மாஸ்டருக்கு இந்த மோதிரத்தை அனுப்பி உள்ளாரா? என்பதை போகப்போக தான் பார்க்க முடியும்.

ஆனால் இது குறித்து குயின்ஸியிடம் ராபர்ட் மாஸ்டர் குழப்பத்துடன் பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகிறது.