79 வயதில் 7 ஆவது குழந்தை… காதலி பற்றி அறிவிக்காத காட்ஃபாதர் நடிகரை நச்சரிக்கும் ரசிகர்கள்!
- IndiaGlitz, [Wednesday,May 10 2023]
‘காட்ஃபாதர்‘, ‘டாக்ஸி டிரைவர்‘ போன்ற பால ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து உலகம் முழுக்க பிரபலமானவர் நடிகர் ராபர்ட் டி நிரே. இவர் தனக்கு 7 ஆவது குழந்தை பிறந்த தகவலைத் தற்போது தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் அவருடைய காதலி யார் என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஹாலிவுட் திரைப்படமான காட்ஃபாதர் திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் ராபர்ட் டி நிரேவை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. இவர் ‘ரேஜிங் புல்‘, ‘ஐரிஷ் மேன்‘, ‘குட்ஃபெல்லாஸ்‘ போன்ற பல ஹிட் படங்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் எப்போதும் குடிக்கொண்டு விட்டார். மேலும் 2 முறை ஆஸ்கர் விருது பெற்று உலகம் முழுக்கவே கவனம் பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது ‘கில்லர்ஸ் ஆஃப் ஃபிளவர் மூன்‘, ‘அபவுட் மை ஃபாதர்‘ போன்ற திரைப்படங்களில் நடித்துவரும் ராபர்ட் டி நிரே உற்சாகமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகர் ராபர் டி நிரேவின் ‘அபவுட் மை ஃபாதர்’ திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அவர் தனக்கு 7 ஆவது குழந்தை பிறந்துள்ளது. அதைப் பற்றி கூற ஏராளமான தகவல் இருக்கின்றன எனத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் பலரும் உங்களது காதலியைப் பற்றி கூறவேயில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் ராபர் டி நிரேவிற்கு தனது முதல் மனைவியான டியான்னே அபோட் மூலமாக 51 வயதில் மகள் ட்ரேனாவும் 46 வயதில் ரஃபேல் என்ற மகனும் உள்ளனர். இதற்கு பின்பு காதலியும் மாடல் அழகியுமான டூக்கி ஸ்மித் மூலமாக இரட்டை குழநதைகள் ஜுலியன் மற்றும் ஆரோன் (27) பிறந்தனர்.
அடுத்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட கிரேஸ் ஹைடவருடன் மகன் எலியட் 24, ஹெலன் கிரேஸ் 11 ஆகியோர் உள்ள நிலையில் கடந்த 2918 இல் நிரே இவரையும் விவாகரத்து செய்துவிட்டார். தற்போது வரும் ஆகஸ்ட்டில் 80 வயதை அடையும் இவர் தனக்கு 7 ஆவது குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் காதலி யார் என்பதைக் கூறாத நிலையில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.