close
Choose your channels

ராபர்ட்-ரக்சிதா செல்லச்சண்டை: பஞ்சாயத்து செய்த ஷெரினா!

Monday, October 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டர் அவ்வப்போது ரக்சிதாவை உற்று நோக்கி பார்த்து வருகிறார் என்பதும் அவரது பார்வையே ஒரு காதல் கலந்த பார்வையாக இருக்கிறது என்றும் பார்வையாளர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திடீரென ராபர்ட்-ரக்சிதா இடையே சாப்பாடு விஷயத்தில் செல்லச்சண்டை நடந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ராபர்ட் மாஸ்டர் பசிக்கிறது சாப்பாடு என்ன இருக்கு? என்று கேட்டபோது ரக்சிதா கஞ்சி இருக்கு சாப்பிடுங்கள் என கூறியுள்ளார். இதனையடுத்து அவர் சாப்பிடாமல் போய்விட்டதை அறிந்து ரக்சிதா மனம் வருந்தி அவரும் சாப்பிடாமல் இருந்துள்ளார்.

இதைக் கேள்விப்பட்ட ஷெரினா, ராபர்ட் மற்றும் ரக்சிதா இடையே பஞ்சாயத்து செய்கிறார். நீங்கள் சாப்பிடாமல் போனால் தான் ரக்சிதாவும் சாப்பிடவில்லை என்றும் நீங்கள் சாப்பிடுங்கள் என்றும் ஏன் இப்படி ஒன்றாம் வகுப்பு குழந்தை மாதிரி நடந்து கொள்கிறீர்கள் என்றும் செல்லமாக கண்டித்தார்.

ரக்சிதாவும் நீங்கள் இப்படி செய்தது எனக்கு மிக மனதுக்கு கஷ்டமாக இருந்தது என்று கூறிய நிலையில் ’நீ சாப்பிடு அதன்பிறகு நான் சாப்பிடுகிறேன் ’என்று ராபர்ட் கூறி, இருவரும் மாறி மாறி செல்ல சண்டை போட்டனர்.

அதன் பிறகு இப்படி நடந்து கொள்ள மாட்டேன் என்று என்னிடம் சத்தியம் செய்யுங்கள் என ரக்சிதா கேட்க அவரை ஷெரினா சத்தியம் செய்த வைத்த காட்சிகளும் அரங்கேறியது. மொத்தத்தில் ரக்சிதா-ராபர்ட்டின் செல்லச் சண்டை பார்வையாளர்களுக்கு க்யூட்டாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment