பிக்பாஸ் வீட்டிற்கு வந்த கிங் சைஸ் பெட்: ராபர்ட் முகத்தில் ஏற்பட்ட பிரகாசம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அரண்மனை  டாஸ்க் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த டாஸ்க்கில் பல்வேறு விதமான கூத்துக்கள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ராபர்ட் அரசனாகவும் ரக்சிதா அரசியாகவும் நடித்து வரும் நிலையில் அரசியிடம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ராபர்ட் தனது கைவரிசையை காட்டி வருகின்றார்.

இந்த நிலையில் அரச குடும்பத்தினர் தூங்குவதற்கு பிரத்யேகமாக கட்டில்கள் தயார் செய்யப்பட்டு உள்ள நிலையில் கிங் சைஸ் பெட் ஒன்றை பார்த்ததும் இதுதான் அரசனும் அரசியும் ஒன்றாக தூங்கும் கட்டில் என்றும், இதில் அரசனும் அரசியும் படுக்க வேண்டும் என்றும் படைத்தலைவர் அசீம் கூறுகிறார்.

இதைக்கேட்டதும் ராபர்ட் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது போல் பிரகாசம் ஆகிறது. ஆனால் ரக்சிதா இதனை கேட்டு ஆத்திரம் அடைந்து அந்த கட்டிலில் தான் அரசனுடன் படுக்க முடியாது என்றும் தனி கட்டிலில் தான் படுப்பேன் என்றும் கூறினார். இதனால் மீண்டும் ராபர்ட்டின் முகம் புஷ்வாணம் ஆகிறது.

இந்த அரண்மனை டாஸ்க்கில் இன்னும் என்னென்ன கூத்துக்கள் நடக்குமோ என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.