ஜாடை மாடையாக செல்லச்சண்டை போடும் ராபர்ட்-ரக்சிதா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக இருக்கும் ராபர்ட் மாஸ்டர், ரக்சிதா மீது ஒரு கண் வைத்து உள்ளார் என்பதும் அவரையே கண்கொட்டாமல் பார்த்து வருவது மட்டுமின்றி அவரிடம் மிகுந்த அக்கறையுடன் பேசி வருகிறார் என்பதும் தெரிந்ததே.
சமீபத்தில் நடந்த டாஸ்க்கில் கூட தனது உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் ரக்சிதாவிடம், ‘ராபர்ட் மாஸ்டர் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் உங்களிடம் ஏதோ சொல்ல வருகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று கமல்ஹாசன் முன்னிலையை கேட்டு அனைவரையும் அதிர வைத்தார்..
இந்த நிலையில் அவ்வப்போது இருவரும் செல்ல சண்டை போட்டு வரும் க்யூட்டான வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு வீடியோவில் இருவரும் செல்லச்சண்டை போடும் காட்சிகள் உள்ளன.
’ஒழுங்காக சாப்பிடாமல் குழந்தைத்தனமா இருந்தால் சூடு வைத்து விடுவேன்’ என்று போலியான கோபத்துடன் ராபர்ட் மாஸ்டர் பற்றி ரக்சிதா கூற, அப்போது ’சூடு எங்கே வைப்பீர்கள்’ என தனலட்சும் ஏத்திவிட சூடு ’எங்கே வேண்டுமானாலும் வைப்பேன்’ என்று ரக்சிதா கூறுகிறார்.
இதை தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டரிடம் கூற அவர் அதற்கு பதிலாக, ‘அதேதான் அவங்களுக்கும், மழையில் நனையக் கூடாது’ என்று கூறுகிறார். சின்ன சின்ன செல்லச்சண்டைகள் போட்டுக் கொண்டிருக்கும் ராபர்ட் மற்றும் ரட்சிதா உறவு எங்கே போய் முடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com