சாலைகள், வீதிகள், தெருக்கள், கார்கள் என எங்கு பார்த்தாலும் பிணம்!!! கொரோனாவால் தத்தளிக்கும் நாடு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தென் அமெரிக்கா நாடுகளுள் ஒன்றான பொலிவியாவில் தற்போது அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. ஏற்கனவே சுகாதாரக் கட்டமைப்புகள் குறைவாக இருக்கும் நாடான பொலிவியாவில் தற்போதைய நிலைமை இன்னும் மோசமாகி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 64 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்றும் உயிரிழப்பு 2,400 என்றும் அந்நாட்டின் சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. ஆனால் உயிரிழப்புகள் இன்னும் அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டின் பல்வேறு புலனாய்வு தரப்புகள் கூறுகின்றன.
காரணம் அந்நாட்டின் சாலைகள், தெருக்கள், வீதிகள், கார்கள் என எங்குப் பார்த்தாலும் கேட்பாரற்று உடல்கள் காணப்படுவதாக அந்நாட்டின் தடயவியல் புலனாய்வு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. கடந்த ஏப்ரல் 1 முதல் ஜுலை 19 வரை இந்த வகையில் 3,016 உடல்கள் மீட்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி தெருக்களில் கேட்பாரற்று கிடக்கும் உடல்களில் 90 விழுக்காடு நபர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்பதும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கொரோனாவால் பலர் வீடுகளிலேயே இறக்கும் சம்பவம் அந்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மருத்துவக் கட்டமைப்பு குறைவாக இருக்கும் பொலிவியாவில் கொரோனாவின் தாக்கம் மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் அரசியல் ஸ்திரமின்மைக் காரணமாக மக்கள் மேலும் பாதிக்கப் படுவதாகக் கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு, பாதுகாப்பு, மருத்துவக் கட்டமைப்பு போன்ற பணிகள் முற்றிலும் தடைப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் அவலநிலை ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜுலை 15 – 20 ஆம் தேதிக்கு மத்தியில் மட்டுமே 400 உடல்கள் மருத்துவ மனைகளுக்கு வெளியே மீட்கப் பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத் துறையே தெரிவித்து இருக்கிறது.
தென் அமெரிக்காவின் மற்றொரு நாடான பிரேசிலில் தற்போது கொரோனா உயிரிழப்பு உச்சத்தில் இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை 84,267 உயிரிழப்பு அந்நாட்டில் நிகழ்ந்து இருக்கிறது. அந்நாட்டின் அதிபருக்கும் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். கொரோனா உயிரிழப்பில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் மட்டும் 1 லட்சத்து 47 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இங்கிலாந்தில் 45 ஆயிரத்துக்கும் மேல், மெக்சிகோவில் 41 ஆயிரத்துக்கும் மேல், இத்தாலியில் 35 ஆயிரத்துக்கும் மேல், பிரான்ஸில் 30 ஆயிரத்துக்கும் மேல், இந்தியாவில் 29 ஆயிரத்துக்கும் மேல் என்று அடுத்தடுத்த எண்ணிக்கை மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com