அரசை குறைகூறாமல் அதிரடியில் இறங்கிய ரஜினி மன்றத்தினர்

  • IndiaGlitz, [Wednesday,May 29 2019]

எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அரசை குறை கூறிக்கொண்டு, போராட்டம் நடத்தி, மக்களின் கவனத்தை பெற்று, தங்களுக்கும் தங்களது கட்சிக்கும் விளம்பரம் தேடி கொண்டிருப்பவர்களின் மத்தியில், அரசை குறைகூறி நேரத்தை செலவு செய்யாமல் காரியத்தில் இறங்கியுள்ளனர் ரஜினி மக்கள் மன்றத்தினர்.

சென்னையில் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடி வரும் நிலையில் மக்களின் தண்ணீர் பிரச்சனையை தங்களால் முடிந்த அளவுக்கு தீர்த்து வருகின்றனர் ரஜினி மக்கள் மன்றத்தினர். திருவள்ளூர் போன்ற தண்ணீர் உள்ள இடங்களில் இருந்து தண்ணீரை லாரி ஒன்றுக்கு ரூ.5000 என விலைக்கு வாங்கி, தண்ணீர் தேவைப்படும் பகுதிக்கு சென்று, இலவசமாக கடந்த 15 தினங்களாக வழங்கி கொண்டிருக்கின்றனர்.

காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தாமல், ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சியையும் குறை கூறாமல், தங்களால் முடிந்த அளவுக்கு மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் ரஜினி மன்றத்தினர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தண்ணீர் கஷ்டம் அதிகம் உள்ள பகுதிகளை மன்றத்தினர் மூலம் கண்டறிந்து அந்த பகுதிகளுக்கு தினமும் லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர்.