கஜா புயல் பாதிப்பு: ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த மாதம் கஜா புயல், டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழித்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும் திரையுலக பிரபலங்களும் பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை கஜா புயலை நேரடியாக பார்வையிடவில்லை என்றாலும், அவரது ரஜினி மக்கள் மன்றத்தினர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை புயல் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நாகை, வேதாரண்யத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தலா ரூ 1.5 லட்சம் செலவில் வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் அறிவித்துள்ளார். ஆறுகாட்டுத்துறை, கோடியக்காடு, கோடியக்கரை ஆகிய பகுதிகளில் தலா 5 வீடுகள் கட்டித்தரப்படும் என தெரிகிறது.
கஜா புயலை நேரில் சென்று பார்த்து வெறும் ஆறுதல் மட்டும் கூறிவிட்டு வந்தவர்கள் மத்தியில், நேரில் செல்லாவிட்டாலும் உதவிகள் சென்று கொண்டிருக்கும்படி நடவடிக்கையை எடுத்து வரும் ரஜினிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout