கஜா புயல் பாதிப்பு: ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,December 31 2018]

கடந்த மாதம் கஜா புயல், டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழித்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும் திரையுலக பிரபலங்களும் பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை கஜா புயலை நேரடியாக பார்வையிடவில்லை என்றாலும், அவரது ரஜினி மக்கள் மன்றத்தினர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை புயல் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நாகை, வேதாரண்யத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தலா ரூ 1.5 லட்சம் செலவில் வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் அறிவித்துள்ளார். ஆறுகாட்டுத்துறை, கோடியக்காடு, கோடியக்கரை ஆகிய பகுதிகளில் தலா 5 வீடுகள் கட்டித்தரப்படும் என தெரிகிறது.

கஜா புயலை நேரில் சென்று பார்த்து வெறும் ஆறுதல் மட்டும் கூறிவிட்டு வந்தவர்கள் மத்தியில், நேரில் செல்லாவிட்டாலும் உதவிகள் சென்று கொண்டிருக்கும்படி நடவடிக்கையை எடுத்து வரும் ரஜினிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

More News

திடீரென இந்தியா திரும்பும் ரோஹித் சர்மா: காரணம் என்ன தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் அந்நாட்டுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று வருகிறது.

மகளின் கிரிக்கெட் ஆசையை பூர்த்தி செய்த ஒரு ரியல் 'கனா' தந்தை

சமீபத்தில் வெளியான 'கனா' திரைப்படத்தில் மகள் ஐஸ்வர்யா ராஜேஷின் கிரிக்கெட் கனவை நனவாக்க தந்தை சத்யராஜ் பல தியாகங்கள் செய்வார்.

இந்திய சினிமாவில் முதல்முறையாக அமலாபால் படம்

ஃபாரன்சிக் சர்ஜன் என்று கூறப்படும் தடய அறுவை சிகிச்சை நிபுணர் கேரக்டரில் இதுவரை இந்திய சினிமாவில் யாரும் நடித்ததில்லை என்ற நிலையில் முதல்முறையாக நடிகை அமலாபால்

விஷாலை அடுத்து திருமணம் குறித்து வரலட்சுமியின் அறிவிப்பு

நடிகர் விஷால் ஆந்திர மாநில தொழிலதிபர் ஒருவரின் மகளான அனிஷாவை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக இன்று காலை தகவல் வந்த நிலையில் நடிகை வரலட்சுமியும் தனது திருமணம் குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

ஓவியா ரசிகரளுக்கான புத்தாண்டு பீர்-பிரியாணி

பிக்பாஸ் புகழ் ஓவியா நடித்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம்;' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் நடித்து வரும் 'காஞ்சனா 3', '90ml', 'களவாணி 2' ஆகிய படங்கள் 2019ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.