close
Choose your channels

கமல் கட்சிக்கு ஆதரவு கொடுத்த பிரபல தயாரிப்பாளர்-நடிகர்

Wednesday, January 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியை தொடங்கவுள்ள நிலையில் அவருடைய கட்சியில் சேரவும், இராமநாதபுரத்தில் நடைபெறும் முதல் மாநாட்டில் பங்குபெறவும் பல கோலிவுட் திரையுலகினர் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவரும் பிரபல தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், கமல் கட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசனின் அரசியல் கட்சிக்கு என்றும் ஆதரவு தருவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் ஆர்.கே.சுரேஷ் அவர்களும் இராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 21ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும்போது ஒரு மினி கோலிவுட்டே பங்குபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment